தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட மாற்றம்.! வியப்பில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொடியாளம் என்ற இடத்தில் போடப்பட்டுள்ள தடுப்பணையில் அதிகப்படியான நுரையுடன் தென்பெண்ணை ஆற்றுநீர் வந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் வியப்புடன் காணச் சென்றார்கள். 

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றுநீர் ஒரத்தூர் ஏரி மூலமாக எல்லையில் உள்ள கொடியாளம் தடுப்பணையின் வழியாக தமிழகத்தை தொட்டு செல்கிறது. கர்நாடக பகுதிகளில் சிலநாட்களாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணையில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது.

இந்த சமயத்தில் கர்நாடக மாநில எல்லையில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் தங்களின் கழிவுகளை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றி விடுகின்றனர். அவ்வாறு ரசாயனம் கலந்த கழிவுகள் ஆற்று நீரில் கலந்து வருவதால் அதிக நுரையுடன் கொடியாளம் தடுப்பணையிலிருந்து கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர் செல்கிறது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thenpennai river in krishnagiri district


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal