எப்படி இருந்த வைகை ஆறு இப்படி ஆயிடுச்சே! வறண்டு கிடக்கும் வைகை மூல ஆறு...!!! - Seithipunal
Seithipunal


தேனியில்  கடமலை மற்றும் மயிலை ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளி மலையில் மூல 'வைகை ஆறு' உற்பத்தியாகிறது.இதனை மூலமாகக் கொண்டு ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.மேலும், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.இதில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாகயுள்ளது.

இதில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில், மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.இதேபோன்று  நீடித்தால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால், கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்பகுதியில்,மழை பெய்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும்.

மேலும், மூல வைகை ஆறு வறண்டுள்ளதால் வைகை அணைக்கு 25 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக சரிந்துள்ளது.

இதனால் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2802 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.மேலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1593 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.70 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.மேலும்,சண்முகாநதி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. கூடலூர் 2.6, சண்முகாநதி 3.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

theni Vaigai River is dry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->