தேனி மாவட்டத்தில் கடன் வழங்கும் முகாம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், எட்டு இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன், கறவை மாட்டுக்கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதேபோல், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம், கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தக் கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெற கடன் வழங்கும் முகாம்கள் நாளை மற்றும் வருகிற 20, 30-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 8 இடங்களில் நடக்கிறது. கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று, தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, கல்விக்கடன் பெறுவதற்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni district collector announce loan camp


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->