அழகு நிலையத்துக்கு பயிற்சிக்காக  சென்ற இளம் பெண்..கடைசியில் நடத்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


பல்லடம் அருகே அழகு நிலையத்துக்கு பயிற்சிக்காக வந்த இளம் பெண்ணை வீடியோ காலில் பேச வைத்து ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ளது ஒரு  அழகு நிலையம்.இந்த அழகு நிலையத்துக்கு  வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், பயிற்சிக்காக சென்றுள்ளார்.அப்போது அந்த அழகு நிலையத்தில் பல்லடத்தை சேர்ந்த பிரபு , மற்றும் அதே பகுதியை சேர்ந்த பானு ஆகியோரும் பயிற்சிக்கு வந்திருந்த அவர்களுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது . அப்போது இந்த பழக்கத்தின் அடிப்படையில் அவ்வப்போது 28 வயது பெண், பிரபுவுக்கு கடன் கொடுத்து வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் கொடுத்த பணத்தை அந்தப் பெண், பிரபுவிடம் கேட்டபோது  அவர், பணம் கொடுக்க வேண்டுமென்றால் தன்னுடன் நேரம் செலவிடுமாறும், ஆபாசமாக வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண்ணும் பிரபுவிடம் வீடியோ காலில் பேசி உள்ளார்.

அப்போது அந்த வீடியோவை  புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்ட பிரபு அந்தப் புகைப்படங்களை பானுவிற்கு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துள்ளார். மேலும் தொடர்ந்து பானுவும், பிரபுவும் சேர்ந்து அந்த புகைப்படத்தை, 28 வயது பெண்ணிடம் காட்டினர். மேலும் , கடனை திருப்பிக்கேட்டால், ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்தப் பெண், இதுபற்றி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானு, பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The young woman who went to the beauty salon for training ended up in shock


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->