ஆணாக மாறிய தோழி.. காதலித்து கரம் பிடித்த இளம்பெண்.. காவல்நிலையத்தில் தஞ்சம்..! - Seithipunal
Seithipunal


ஆணாக மாறிய தோழியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த இளம்பெண் அங்குள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த கம்பெனியில் வேலை செய்து வரும் பெண் ஒருவருடன் கடந்த 10 ஆண்டாக நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் தோழிக்கு உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுள்ளது.

இதனால் , அவர் சிகிச்சை எடுத்து கொண்டு திருநம்பியாக மாறியுள்ளார். திருநம்பியாக மாறியவரும் இளம்பெண்ணும் காதல்வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி கடந்த 8ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் வீட்டில் அவரை தேட்டி வந்த நிலையில், அவர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அந்த இளாம்பெண்ணின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது,  அந்த பெண் தான் விரும்பி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young woman who grabbed the girlfriend who became a transgender


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal