கரூர் சம்பவம்: தவெக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள்..!
The verdict in the case filed against TVK regarding the Karur incident is on October 13
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தவெக தரப்பினர் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதியன்று மாலை தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியது.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரணை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கரூர் சம்பவத்தை முன்வைத்து, தவெக மட்டுமல்லாது மேலும் 04 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளதோடு, இரு தரப்பிலும் வாத, பிரதிவாதங்கள் நீண்ட நேரம் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை நடத்தியது. அதில் தவெக தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் (அக்டோபர் 13) திங்கட்கிழமை வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The verdict in the case filed against TVK regarding the Karur incident is on October 13