ஊட்டி குதிரை பந்தயம்! ரூ.822 கோடி குத்தகை பாக்கி! மைதானத்திற்கு சீல் செல்லும்! - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட ஊட்டி குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்தது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை விடுமுறைகளான ஏப்ரல்,மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்துவது வழக்கம்.

மெட்ராஸ் ரேஸ் கிளப் ரூ.822 கோடி குத்தகைய பாக்கியம் செலுத்தக்கூடிய வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன் வரவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குத்தகை பாக்கியை செலுத்தவில்லை என்றால் நிலத்தை அரசு கையகப்படுத்தி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது. குத்தகைய பாக்கி செல்லுததால் வருவாய் துறை அதிகாரிகள் குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் கிளப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்தது செல்லும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Supreme Court has ordered that the Ooty horse racing ground will be sealed


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->