தமிழ்நாட்டின் மிக சிறந்த பாரம்பரிய நீர்ப்பாசனத்தின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புகளுக்கு விருதினை வென்றுள்ள செய்யார் மற்றும் கொடிவேரி அணைக்கட்டு..! - Seithipunal
Seithipunal


சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் சார்பில் 04-வது உலக நீர்பாசன மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று  நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரியமிக்க நீர்ப்பாசன கட்டமைப்புகளான செய்யார் அணைக்கட்டு,கொடிவேரி அணைக்கட்டு, நொய்யல் நீர் பாசன கட்டமைப்புக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

1852-இல் கட்டப்பட்டு 200 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள செய்யார் அணைக்கட்டு, 300 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள கொடிவேரி அணைக்கட்டும் மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்டு 700 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள நொய்யல் நீர் பாசன கட்டமைப்புக்கும் வழங்கப்பட்ட தமிழ்நாட்டின் மிக சிறந்த பாரம்பரிய நீர்ப்பாசனத்தின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புகளுக்கு விருதினை சி.பொதுப்பணி திலகம். தலைமை பொறியாளர், சென்னை மண்டலம் மற்றும் தீ.தமிழ்ச்செல்வி, தலைமை பொறியாளர், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம், சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் தலைவர் டாக்டர். மார்கோ ஆர்சியேரி மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர். ஆர்.கே.குப்தா அவர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Seyyar and Kodiveri dams have won awards for the construction and maintenance of the best traditional irrigation works in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->