வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: தாயுமானவர் திட்டம்’ தொடங்கியது!
The ration items coming home The Mother Scheme has started
தமிழகம் முழுவதும் 34,809 நியாய விலைக் கடைகளில் மூலம் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி இன்று தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுசென்னை தண்டையார் பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-மக்கள் நலன்சார்ந்த இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட , மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.இதற்காக அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
English Summary
The ration items coming home The Mother Scheme has started