பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன்  மதிப்பு 5,25,000 ஆகும். 

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில்  முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS (குற்றம் மற்றும் புலனாய்வு) அவர்கள் தலைமை வகித்தார், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் PPS ( Cyber Crime) மற்றும் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் இதர காவலர்கள் கலந்து கொண்டனர். 

இதில் 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.  அதற்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்களிடம் மேற்கூறிய புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட்டார்.  

மேலும் பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன்  மதிப்பு 5,25,000 ஆகும். 

மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான.

*சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம் அவர்கள் அனைவரும் இணைய வழி மோசடிக்காரர்கள். 

* , மும்பை போலீஸ், CBI, TRAI இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். இது இணைய வழி மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சி ஆகையால் இதுபோன்று அழைப்புகள் வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும். 
என்று மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  இணைய வழியில் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தமான விழிப்புணர்வும் மற்றும் அறிவுரையும் கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The police have handed over 25 lost cell phones to their rightful owners


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->