உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் ஏமாற்றும் நாடகம்..தமிழிசை விமர்சனம்!
The plan with Stalin is a deceptive drama Tamilisais criticism
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திமுக அரசின் நடவடிக்கைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்துக் கடும் விமர்சனம் செய்தார்.
மக்களை ஏமாற்றவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் என தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம் செய்தார்,தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசையும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தையும் கடுமையாக தாக்கினார்.
மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செயல்படுகிறது என்றும்,
45 நாட்களில் செயல் பார்க்கும் அரசுக்கு, கடந்த 4 ஆண்டுகளில் எதுவும் செய்ய இயலாததன் விளக்கம் தேவையென்றும் தமிழிசை குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை:"தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத சாதனை" – பிரதமர் மோடியின் தலைமையில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கமாகியுள்ளன.
திமுக பா.ஜ.க. நிதி கொடுக்கவில்லை என்று வீடு, வீடாகச் சென்று கூறும் நிலையில், மத்திய அரசு ரூ.4,900 கோடி வழங்கியுள்ளது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.“மத்திய அரசை குறை கூறி, மாநில மக்கள் மீது பொறுப்பு இல்லாமல் இருக்கும் திமுக அரசு, ஏமாற்றுப் போக்கில் உள்ளது”
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நேர்மையான அதிகாரிகள் துரோகம் செய்யப்படுகிறார்கள்.
“தமிழக சுகாதாரத்துறை நம்பர் ஒன் என்றால், முதல்வர் ஏன் வெளியூரில் சிகிச்சை பெற்றார்?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
English Summary
The plan with Stalin is a deceptive drama Tamilisais criticism