சப்பை கண்ணாடியை ஜகஜால கண்ணாடியாக கூறி மோசடி.. நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்டு, கதறிய மூடன்..! - Seithipunal
Seithipunal


சாதாரண கண்ணாடியை மேஜிக் கண்ணாடி என கூறி 1 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் அரசமுத்து, திவாகர்  நண்பர்களான இவர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் படி இருவரும் தங்களிடம் இருக்கும் சாதாரண கண்ணாடியை மாயகண்ணாடி என சொல்லி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் இந்த  கண்ணாடியை போட்டு பார்த்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய யுவராஜ் தன் நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகியோருடன் இந்த கண்ணாடியை வாக்குவதற்காக தேனி சென்றுள்ளார். அப்போது மாநகராட்சி சுடுகாட்டுக்கு வர சொல்லியுள்ளனர்.

அப்போது அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு கண்ணாடி ஒன்றை கொடுத்து விட்டுட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர்.

அந்த கண்ணாடி சாதாரண கண்ணாடி தான் என அறிந்த யுவராஜூம் அவரது நண்பர்களும்  இருவரையும் பிடிக்க விரட்டியுள்ளனர். திவாகர் தப்பியோட சிக்கிய அரசமுத்துவை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து , யுவராஜின் புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள திவாகரையும் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person who sold the ordinary glass as fake magic glass has been arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->