300 ஏக்கர் நிலத்தை மக்களே பிரித்து எடுத்துக் கொள்ளலாம்!பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருக்காமே!கேஎன் நேரு விளக்கம்! - Seithipunal
Seithipunal


திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றி ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி,“பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைச்சர் நேருவின் நிலத்தின் மதிப்பு உயர வேண்டும் என்பதற்காகவே அங்கு கட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் செட்டியார் அன்னதான டிரஸ்டின் 17 ஏக்கர் நிலம் அதிகாரத்தை பயன்படுத்தி அபகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் குழந்தை முதலியார் தோட்டத்தில் உள்ள 18 ஏக்கர் கோயில் நிலத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் முறைகேடாக பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், அந்தச் சொத்துக்கள் மீட்கப்படும்”
என்று குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என். நேரு கடும் மறுப்பு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால், அரசோ அல்லது மக்களோ எடுத்துக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன். எனக்கும் என் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அங்கு ஒரு சதுர அடியும் நிலம் இல்லை. அப்படி 300 ஏக்கர் நிலம் இருந்தால், எடப்பாடி பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்”
என்று சவால்விட்டார்.

மேலும், அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை அதிமுகவினர் தாக்கியதாகவும் அமைச்சர் நேரு கண்டனம் தெரிவித்தார்.“உயிர் காப்பாற்ற வருகிற ஆம்புலன்ஸையே தாக்குவது மிகவும் தவறான செயல்”
என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் வார்த்தைபோரால், திருச்சி அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The people can divide and take 300 acres of land I have 300 acres of land in Panchapur KN Nehru explains


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->