திருமணமான 20 நாட்களில் வாழ்க்கையை முடித்து கொண்ட புதுமாப்பிள்ளை..காரணம் என்ன ?
The newlywed groom who ended his life 20 days after marriage What is the reason?
திருவள்ளூர் அருகே திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4-ந்தேதி ஜெயஸ்ரீ என்பவருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது . இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சண்டை வந்ததாக சொல்லபடுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கார்த்திகேயன் தனது மனைவி ஜெயஸ்ரீயை வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ளே வைத்து வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி ஜெயஸ்ரீ ஜன்னல் கதவைத் திறக்க கூறி சத்தம் போட்டுள்ளார்.ஆனால் ஜன்னல் திறக்கவில்லை.
உடனடியாக அருகில் இருப்பவர்கள் வெளியே வந்துள்ளனர். அப்போது அந்த நேரத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் சம்பவத்தை அறிந்து மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The newlywed groom who ended his life 20 days after marriage What is the reason?