அரசின் புதிய கொள்கை முடிவுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் என்பது அரசின் புதிய கொள்கை முடிவுகள் நடைமுறையில் உள்ள நலத்திட்டங்களில் மாற்றங்கள் செய்தல், புதிய திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேபினட் கூட்டங்களில் முடிவெடுக்கப்படும். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் துணை நிலை ஆளுநரின் அனுமதியோடு செயல்படுத்தப்படும். அரசு நிர்வாகம் என்பது முறைகேடுகள் அற்ற ஒளிவுமறைவில்லா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது: புதுச்சேரிமாநிலத்தல் கடந்த 10-1-2025 மாண்புமிகு முதல்வர் தலைமையில் கேபினட் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய கொள்கை முடிவுகள் மற்றும் புதிய செயல் திட்டங்கள் குறித்து இதுவரை அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை கேபினட் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் ரகசிய தஸ்தாவேஜீகள் அல்ல. அவை அனைத்தும் ஒப்பன் டாக்குமெண்ட்ஸ் என்பதை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. மத்திய அரசால் கூட்டப்படும் கேபினட் கூட்ட முடிவுகளும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளால் கூட்டப்படும் அமைச்சரவை முடிவுகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே பகிரங்கமாக வெளியிடப்படும். ஆனால், கடந்த கால திமுக. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் தற்போது நடைபெறும் பிஜேபி, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் கேபினட் முடிவுகள் வெளியிடப்படுவதில்லை. இதுபோன்ற செயல் ஏற்புடையதல்ல.

10-1-2025-ல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் குறித்து அரசு அறிவிக்காததால் பல்வேறு ஊகத்தின் அடிப்படையில் செய்தி நிறுவனங்கள் மூலம் பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இதில் எது உண்மை என்றும், எது பொய் என்றும் தெரியவில்லை. இதனால், மக்கள் மத்தியில் அரசின் மீது நம்பகத்தன்மை ஏற்படுகிறது. வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் என். ஆர். காங்கிரஸ், பிஜேபி அரசு ராஜினாமா செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது என எதாவது ஊடக மற்றும் செய்திதாள்களில்செய்தி வெளியிடப்பட்டாலும் அதை மறுத்து பதிலளிக்காமல் வாய்மூடி மௌனமாக அரசு இருக்கும் போலஉள்ளது.

நம் மாநிலத்தை பொறுத்தவரை புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் பிரச்சனை பூதாகாரமாக தினசரி உருவாக்கப்பட்டு வருகிறது.புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும். ஆம் எனில் அம்முடிவு எப்போது எடுக்கப்பட்டது? அரசின் இந்த கொள்கை முடிவிற்கு துணை நிலை ஆளுநர் முன்பே அனுமதி அளித்துள்ளாரா? ஓராண்டிற்கு முன்பு புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்க துணை நிலை ஆளுநரின் அனுமதியோடு அரசால் விண்ணப்பங்கள் பெறப்பட்டதா?

 புதிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவருவது பிஜேபி, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கை முடிவு என்றால், அதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு தற்போது நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் அனுமதி வழங்க ஏதாவது அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அதற்கு துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளரா? என எதுவும் தெரியவில்லை.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியை பொறுத்தவரை ஒரு இடத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடை கொண்டுவர வேண்டும் எனில் துணை நிலை ஆளுநர் அனுமதியில்லாமல் கொண்டுவர முடியாது. அப்படி இருக்கும் போது புதிய மதுபான தொழிற்சாலை அமைக்க துணை நிலை ஆளுநர் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்துள்ளாரா? இல்லையா என்பதை ஏன் பகிரங்கமாக தெரிவிக்க வில்லை. இதுவரை துணை நிலை ஆளுநர் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் இதற்கு மேல் அனுமதி வழங்குவாரா? என மக்களின் நியாயமான கேள்விக்கு
வெளிப்படையாக பதிலளிக்க வேண்டியது துணை நிலை ஆளுநரின் கடமையாகும்.

தற்போது காங்கிரஸ் கட்சியானது துணை நிலை ஆளுநரை சந்தித்து இப்பிரச்சனையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஊழலைப் பற்றி பேசும் தகுதி கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு தகுதி இல்லை.

கடந்த கால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் சத்தான முட்டை கமிஷன், இலவச அரிசியில் கமிஷன், இலவச துணி, மின் ஹைமாஸ் லைட் அமைத்தது, பிப்டிக் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் ஊழல், ஒரிசா நிலக்கரி சுரங்க ஊழல் பல்வேறு ஊழல் புரிந்தவர்கள், இன்று மகா உத்தமர்கள் போல் வேடமணிந்து சிபிஐ விசாரணை வேண்டும் என துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு சென்றது கடந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கு ஒப்பாகும்.

புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் பிரச்சனையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் மதுபான தொழிற்சாலை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெகுண்டு எழுந்து கேள்வி எழுப்பியுள்ளார், புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில் திமுக என்பது ஆளும் கட்சியின் ஒர் அங்கம் என்பதை நாராயணசாமி மறந்து விட்டார்.சட்டப்பேரவை தலைவர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் எதிர்க்கும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்தியலிங்கம் அறிவிப்பிற்கு பிறகு, பிஜேபி சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்காது என பிஜேபி-க்கு ஆதரவாக திமுக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளி யிடப்பட்டதை கூட நாராயணசாமி மறந்து பேசுகிறார். அந்தளவிற்கு நாராயணசாமி தடுமாற்றத்தில் உள்ளார்.
புதிய மதுபானம் தொழிற்சாலைகள் வழங்குவது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் அவர்கள் வாய்மூடி மௌனம் காப்பது ஏற்புடையதல்ல. கடந்த சில நாட்களாகவே துணை நிலை ஆளுநர் மாளிகை என்பது பஞ்சாயத்து செய்யும் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லயா? என்பதை ஏன் தெரியப்படுத்தாமல் மௌனம் சாதிக்கிறார். இவ்விஷயத்தில் தேசிய கட்சியான பிஜேபியின் முடிவு என்ன என்பதை பிஜேபி மூலம் துணைநிலை ஆளுநராக உள்ள நம் துணை நிலை ஆளுநர் தெரியப்படுத்த வேண்டியது அவரின் கடமையாகும் என்றார் அன்பழகன் (அதிமுக மாநில செயலாளர்).

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The new policy decisions of the government should be transparent. AIADMK insists


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->