காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி திருவிழா..! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜபெருமாள் கோயிலில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப்பெருமாள் கோயில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் எழுந்தருளி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

அதன் பின்னர், கோயிலுக்கு திரும்பிய பெருமாள், நுழைவாயிலில் பெருந்தேவித்தாயாருடன் இணைந்து கோயில் வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சிக் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பெருமாளும், தாயாரும் 100 கால் மண்டபத்தில் இருந்து இறங்கி கண்ணாடி அறையில் எழுந்தருளினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர், பெருமாள், ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செல்வது, கோயில் நுழைவாயில் வந்து தாயாரை அழைத்து கொண்டு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது நடைபெற்றது. 

நவராத்திரியின் கடைசி நாளான வரும் 20-ஆம் தேதி குதிரை வாகனத்தில் பெருமாள், எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு எய்து வன்னிகாசுர வதம் நடநடைபெறும். அதனுடன், 10 நாள் விழா நிறைவு பெறும். நவராத்திரி விழாவில் தொடக்க நாளில் இந்தியா முழுவதும் அனைத்து கோவில்களும் விழா கோலம் பூண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Navaratri festival has commenced with great fanfare at the Kanchipuram Varadaraja Perumal Temple


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->