அடங்காத ஆசையால் தொழிலதிபருக்கு நேர்ந்த கதி!
The fate that befell the businessman due to uncontrollable desire
காமவலையில் வீழ்த்தி தொழிலதிபரை தாக்கி நகை, பணத்தை பறித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணும், அவரது காதல் கணவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ்,வாரத்துக்கு ஒருமுறை சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று மசாஜ் செய்வது வழக்கம்.
அந்த கிளப்பில் பணியாற்றிய ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ-இந்திய மசாஜ் அழகியுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம்.இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி , தொழிலதிபர் சார்லசுடன் செல்போனில் பேசிய ஆண்ட்ரியா, சூளைமேட்டில் வசிக்கும் தனக்கு தெரிந்த ரேகா சாவித்திரி என்பவர் சொகுசு விடுதி நடத்தி வருகிறார் என்றும், அங்கு வந்தால் வித்தியாசமான உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதை உண்மை என்று நம்பி சூளைமேட்டில் உள்ள குறிப்பிட்ட சொகுசு விடுதிக்கு சென்ற உடனேயே அங்கிருந்த ஆண்கள் இருவரும் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, சார்லசை சரமாரியாக தாக்கினார்கள்.
பின்னர் சார்லஸ் அணிந்திருந்த 20 பவுன் தங்கச்சங்கிலி, கைச்சங்கிலி ஆகியவற்றையும் விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தையும் போலீஸ் என்று அபகரித்தனர். பின்னர் சார்லசை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது மசாஜ் அழகி ஆண்ட்ரியாவும் அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனும்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மசாஜ் மோசடி ராணி ரேகா சாவித்திரியும், போலீஸ்காரராக நடித்த நவீன்குமார் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவான ஆண்ட்ரியாவையும், அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனையும் போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் அவர்கள் இருவரும் மேட்டுப்பாளையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. அவர்களது மோசடி லீலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
English Summary
The fate that befell the businessman due to uncontrollable desire