தொடங்கிய  சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த தீபாவளி ரெயில் டிக்கெட்டுகள்! - Seithipunal
Seithipunal


காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி, சில நிமிடங்களிலேயே நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, சேரன், பொதிகை எஸ்க்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. 

வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இந்த தீபாவளி பண்டிகையை  கொண்டாட  வெளியூரில் உள்ளாவார்கள்  ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அப்போது ரயில் ,அரசு பேருந்து,தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.இதில் சிக்கி கொள்ளாமல் இருக்க ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்வர், தற்போது ரெயில் டிக்கெட்டுகள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமையே அதாவது அக்டோபர் 17-ம் தேதியே ஊருக்கு கிளம்புவார்கள். எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது.

அதன்படி, அக்டோபர் 17-ந்தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்றும், அக்டோபர் 18-ந்தேதி  பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும்  அக்டோபர் 19-ந்தேதி  பயணம் செய்பவர்கள் வருகிற 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம். மேலும், அக்டோபர் 20-ந்தேதி  தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 21-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக அக்டோபர் 16-ந்தேதி அன்று சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ந்தேதிசென்னை திரும்புபவர்கள் வருகிற 22-ந்தேதியும், அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 23-ந்தேதி முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி, சில நிமிடங்களிலேயே நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, சேரன், பொதிகை எஸ்க்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்ததால், இணையதளத்திற்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிலர் சிரமத்தை சந்தித்தனர்.

இருப்பினும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட்டுகளை திட்டமிட்டபடி முன்பதிவு செய்தனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடயில் தீபாவளி ரெயில்களுக்கான முன்பதிவுகளை பொறுத்து சிறப்பு ரெயில்கள் இயக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும்ரெயில்வே அதிகாரிகள் தொிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Diwali train tickets sold out in just a few minutes


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->