கொடூரம்! தொடர்ந்து அழுத 5 மாத குழந்தை! ஆத்திரத்தில் அடித்து கொன்ற கொடூர தந்தை! - Seithipunal
Seithipunal


நீலகிரி : குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை 5 மாத குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்ட் ஊட்டி பகுதி சேர்ந்தவர் பிரேம். இவர் கொரியர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. இவர்கள் இருவருக்கும் கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.

நேற்று முன் தினம் காலை 9 மணிக்கு பிரேம் வேலைக்கு சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குழந்தை கண்ணம் சிவந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை எந்த அசைவும் இல்லை. பயந்து போன ரம்யா அக்கபக்கத்தினர் உதவியுடன் குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறியதை கேட்டு ரம்யா கதறி அழுதுள்ளார் . குழந்தையின் சாவில் சந்தேகம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரம்யா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது. இதில் கடந்த சில நாட்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை தாங்க முடியாத பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார். இதனை ரம்யா கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் ரம்யா துணிதுவைத்து கொண்டிருந்தபோது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த பிரேம் தனது குழந்தையை அடித்துள்ளார் உள்ளார். இதில் மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து குழந்தையின் தந்தை பிரேமை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The child who kept crying The brutal father who killed in rage


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->