சென்னை சங்கமம் நிகழ்ச்சி; 'திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும்'; முதலமைச்சர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார். குறித்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் மற்றும் மேயர் ப்ரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது: "சென்னை சங்கமம் என்பது தமிழ் சங்கமமாக, ஒட்டுமொத்த கலைஞர்களின் சங்கமமாக, வெற்றி சங்கமமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ் கலை, பண்பாட்டு துறை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது என்று பாராட்டி பேசினார்.  

அத்துடன், கலைஞர்கள் தங்கள் திறமைகளை மிக எழுச்சியுடன் பறைசாற்றியுள்ளனர் என்றும், அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது சல்யூட் என்று குறிப்பிட்டார். மேலும். வரவிருக்கும் காலங்களில் திராவிட மாடல் அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரிய இருக்கிறது என்று கூறியதோடு, அதற்காக நான் இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், ''கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்." என மேலும் குறிப்பிட்டார்.

'சென்னை சங்கமம் என்ற நம்ம ஊரு திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னையில் ஜனவரி15-18 வரை 20 இடங்களில் மாலை 06 மணி முதல் இரவு 09 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister says the Dravidian model government will achieve many more milestones for the arts


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->