‘ஜனநாயகன்’ கச்சேரி பாடலில் இடம்பெற்ற அந்த காட்சி! – கரூரில் ஷூட்டிங் நடந்தது உண்மைதானா? எழும் புதிய சர்ச்சை!
That scene from the Jananayakan concert song Is it true that the shooting took place in Karur A new controversy arises
தவெக தலைவரும் நடிகருமான தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’, திரையுலகிலும் அரசியலிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தப் படம் ஜனவரி 9 அன்று வெளியாக இருப்பதால், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் அரசியல் வரவுக்கு இது ஒரு பெரும் மைல்கல் என கருதப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.அனிருத் இசையமைப்பில், விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்த பாடல்,விஜய்யின் அரசியல் தொடக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாடலில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்து மக்களுக்கு உரையாற்றுவது,மக்கள் கூட்டத்தில் கையை அசைத்து வாழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இதனால், “இந்த காட்சிகள் உண்மையிலேயே விஜய்யின் பிரச்சாரத்தின் போது படமாக்கப்பட்டதா?” என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய்யின் கரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் நடந்த பிரச்சாரங்கள் அப்போது பெரும் மக்கள் திரளைக் கண்டன.
அதே சமயத்தில், ‘ஜனநாயகன்’ படத்தின் இந்த காட்சிகள் அந்தப் பகுதிகளில் எடுத்ததா என்ற சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.
முக்கியமாக, கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த செய்தி.
அதற்கான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது அதே பிரச்சார காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பது புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,“கரூரில் அனுமதியின்றி ‘ஜனநாயகன்’ படத்தின் ஷூட்டிங் நடந்தது”என்று குற்றம்சாட்டியிருந்தார்.
அவர் மேலும் கூறியதாவது,“கரூர் பிரச்சாரத்தின் போது அதிநவீன ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.அதே கேமராக்களால் பட காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கலாம்,”என்று நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
இப்போது வெளியான பாடல் காட்சிகள், அவரது குற்றச்சாட்டை மறைமுகமாக உறுதிப்படுத்தும் போல இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் பரவி வருகிறது.
‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் முதலில் போலீஸ் அதிகாரியாக இருந்து, பின்னர் அரசியல்வாதியாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களமும் பாடல் வரிகளும் இணைந்து, விஜய்யின் அரசியல் நோக்கத்தை நேரடியாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.இதனால் இந்தப் படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல, விஜய்யின் அரசியல் அறிமுகத்தின் சினிமா வடிவம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
‘தளபதி கச்சேரி’ பாடலின் பிரச்சார காட்சிகள், ‘ஜனநாயகன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளன.ஆனால் அதே சமயம், கரூர் மற்றும் நாகை பிரச்சார காட்சிகள் இணைக்கப்பட்டதா என்ற கேள்வி
திரையுலகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில்,‘ஜனநாயகன்’ படம் வெளிவரும் முன்பே “திரை – அரசியல்” எல்லையை கடக்கும் பிரச்சாரப் போராட்டம் துவங்கி விட்டது என்பது உறுதி.
English Summary
That scene from the Jananayakan concert song Is it true that the shooting took place in Karur A new controversy arises