ஆன்லைன் தோழர்களுடன் வீட்டில் அதிரிபுதிரி... கணவனின் சொத்தை, ஊராருக்கு ஊட்டி வளர்த்த நாயகி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் காயித் மில்லே பகுதியை சார்ந்தவர் யூசுப் (வயது 45). இவர் குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில், அசிலா என்ற பெண்மணியை இரண்டாவதாக மனம் முடித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் என 2 மனைவிகளுக்கு, 2 வீடுகள் எடுத்து தங்கவைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், சம்பவத்தன்று தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காரில் சென்று கொண்டு இருந்த யூசுப்பை இடைநிறுத்திய மர்ம நபர்கள், கொடூர கொலை செய்துள்ளனர். தனது உயிரை காப்பாற்ற சாலையில் ஓடியும், நடுரோட்டில் துள்ளத்துடிக்க கொலை நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் உள்ளது. 

பட்டப்பகலில் அரங்கேறிய கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மக்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் ஐவரை கைது செய்து, யூசுப்பின் மனைவி அகிலாவை வரவழைத்து விசாரணை செய்ததில், காவல் துறையினர் கைது செய்துள்ள யாரையும் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். 

இதனை நம்பாத காவல் துறையினர், அசிலாவை சந்தேக வளையத்தின் கீழ் கொண்டு வந்து மேற்கொண்ட விசாரணையில், இரண்டாவது திருமணம் செய்த யூசுப், கடந்த 2016 ஆம் வருடத்தில் தஞ்சாவூரில் அஸீலாவை விட்டுவிட்டு குவைத் சென்றுள்ளார். இதன்பின்னர் அஸீலாவிற்கு இணையத்தின் மூலமாக பல நண்பர்களின் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களை இல்லத்திற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

யூசுப் வங்கிகணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரையும் தனது கைக்குள் போட்டுகொண்டு 300 சவரன் நகை, கோடிக்கணக்கான சொத்துக்கள் போன்றவற்றை தனது பெயருக்கும் மாற்றியுள்ளார். இந்த விஷயம் 2018 ஆம் வருடத்தில் யூசுப்பிற்கு தெரியவரவே, இதனை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

மேலும், யூசுப் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், விவாகரத்து கிடைத்தால் சொத்துக்கள் பறிபோகும் என்பதால் கூலிப்படையை ஏவி ரூ.10 இலட்சம் செலவில் கொலை அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur murder police investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->