படிக்கட்டு பயணம் நொடியில் மரணம்.. கல்லூரி மாணவர் பேரிக்கார்டு மீது மோதி உயிரிழப்பு.! 
                                    
                                    
                                   Thanjavur Kumbakkonam PS Sethuraman Bus Travelling College Student Died Accident 
 
                                 
                               
                                
                                      
                                            பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவன், சாலைத்தடுப்பு (Barricade) மீது மோதி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பயின்று வந்தவர் இலக்கிய ராஜா. இவரது சொந்த ஊர் பாபநாசம் அருகே உள்ள மேலவழுத்தூர் ஆகும். இவர் தினமும் பி.எஸ் சேதுராமன் என்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 
தினமும் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், இன்றும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், படியில் நின்றுகொண்டு இலக்கிய ராஜா பயணம் செய்துள்ளார். 

பேருந்து கும்பகோணம் மைண்ட் தியேட்டர் அருகே முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற போது, படிக்கட்டில் பயணம் செய்த ராஜா மீது சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிக்கார்டு மோதியுள்ளது. 
இந்த விபத்தில், பேருந்தில் இருந்து தவறிவிழுந்த இலக்கிய ராஜா உயிருக்காக போராடி துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்து நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Thanjavur Kumbakkonam PS Sethuraman Bus Travelling College Student Died Accident