தஞ்சாவூர் கிரீன்லேண்ட் கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார்... காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரிலிருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலையில், கிரீன்லேண்ட் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் தாளாளராக 55 வயது செல்லையா என்பவர் இருந்து வரும் நிலையில், கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், அவரது தாயுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரில், " படித்த பின்னர் நூறு விழுக்காடு வேலை வாய்ப்பு, படிக்கும்போது 6000 முதல் 12000 வரை சம்பளத்துடன் கூடிய வேலை, முதலாமாண்டு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும், அடுத்த ஆண்டுகள் வேலை வாய்ப்பில் வருமானத்தை வைத்து கட்டணத்தை செலுத்தலாம் " என்று, கவர்ச்சிகரமான விளம்பரத்தை ஏற்படுத்தி பலரை கல்லூரியில் செல்லையா சேர்த்துள்ளார். 

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். இதில், இரண்டாம் தாரமாக மனைவியாகியவர், கல்லூரிக்கு வேலைக்கு வந்த பெண் என்றும், அந்த பெண்ணின் மூலமாக கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் ரீதியான தொல்லை தருவதாக கூறப்படுகிறது. 

இந்த வருடம் கேட்டரிங் படிப்புக்கு சேர்ந்த என்னிடமும் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட செல்லையா, அவரின் மகள் வயது உள்ள என்னை மனைவியாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக எனது தாயிடம் தெரிவித்த நிலையில், அவர் கல்லூரிக்கு வந்து கேட்கையில், அவர்கள் கொலை மிரட்டல் விடுகிறார்கள். அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கல்லூரி தாளாளர் செல்லையா, " தான் மாணவியுடன் பழகியதே இல்லை என்றும், அவருடைய தாயுடன் கொண்ட நட்பு காரணமாக, மாணவிக்கு உதவிய நிலையில், இருவரும் பணத்தாசை கொண்டு தன்னை அவதூறான புகாரில் மிரட்டுவதாகவும் " தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Greenland Catering and Nursing College Chellaiya Sexual Torture Complaint


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal