மழைக்காலங்களில் வாகனத்தை எடுப்பவர்கள் உஷார்.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்.. காத்திருந்த அதிஷ்டம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை சுவர்ணபூமி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் முப்பிடாதி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டை நோக்கிய பயணம் செய்து கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில், வாகனத்தில் இருந்த நல்ல பாம்பு ஒன்று, முப்பிடாதியை கடித்துவிட்டு மீண்டும் வாகனத்திற்குள் சென்றுள்ளது. உடனடியாக தனது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த முப்பிடாதி, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முப்பிடாதியை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தை பிரித்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நல்ல பாம்பை உயிருடன் மீட்டுள்ளனர். 

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முப்பிடாதி, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முப்புடாதி, அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொண்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக முப்புடாதி கூறுகையில், " தற்போது மழைக்காலம் என்பதால் இரு சக்கர வாகனத்தில் பாம்புகள், பூரான், தேள் போன்றவை குடியேறி அதிக வாய்ப்பு உள்ளது. இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் நபர்கள், வாகனத்தை ஒரு முறை சோதனை செய்துவிட்டு வாகனத்தை இயக்குவது நல்லது. எனது வாகனத்தில் பதுங்கியிருந்த நல்ல பாம்பின் வால் பகுதி, பின்பக்க சக்கரத்தின் சுற்றி உள்ளது. இதனை நான் கவனிக்கவில்லை. 

வண்டியை ஓட்டும் போது அதன் வால் பகுதி அடிபட்டதால், தனக்கு உடல் வேதனை அதிகரித்து பாம்பு என்னை கடித்தது. உடனடியாக மருத்துவ உதவி கிடைத்ததால், நான் உயிர் பிழைத்தேன். இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது, தயவு செய்து சோதனை செய்து விட்டு எடுங்கள் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Youngster Byte Snake During Two Wheeler Travelling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->