"என் வேலைக்கு வருகிறாயா?" - மாற்றுத்திறளியிடம் தென்காசி ஆட்சியர் நக்கல் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற மாற்றுத்திறனாளி பெண்  தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சரின் பரிந்துரைக்கவும் மனு கொடுத்துள்ளார். ஆனால் அமைச்சரிடமிருந்தும் பரிந்துரை கடிதம் கிடைக்கவில்லை.

இதுபோன்ற அவர் தொடர்ந்து 23 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மீண்டும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றுள்ளார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் "என் வேலைக்கு வருகிறாயா?" என கிண்டலடித்துள்ளார். இதனால் மனம் உடைந்து போன அந்த மாற்றுத்திறனாளி பெண் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களுக்காக பணியாற்ற வேண்டிய மாவட்ட ஆட்சியரே இது போன்ற கேட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக செய்தியாளர்கள் முன்னிலையில் மன வேதனையுடன் பேசியுள்ள அவரின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi collector sarcastic speech to disabled woman


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->