உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் விடுமுறை...! சென்னையில் முழுமையாக மூடப்படும் மதுக்கடைகள்...! - அரசின் அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.

மே தினம் முன்னிட்டு, வருகிற மே 1ஆம் தேதி, சென்னை மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை நிலையங்களும், அவற்றுடன் இணைந்துள்ள பார்களும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் எந்தவிதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது, நடைமுறையில் உள்ள மதுபானக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதோடு, முக்கிய நாளின் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC holiday Labor Day Liquor shops completely closed Chennai Government emergency order


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->