மதுபாட்டில் வாங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! சத்தியமங்கலம் அருகே பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுப்பானக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இன்று மதுபானக் குடோனில் இருந்து மதுபாட்டில் வந்தடைந்தன. அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற மதுப்பிரியர் இந்த டாஸ்மாக் மதுப்பானக்கடையில் குவாட்டர் மதுப்பாட்டில் வாங்கி இருக்கின்றார்.

குவாட்டர் பாட்டிலில் குறிப்பிட்ட விலையை விட ரூ.5 அதிமகாக விற்கப்பட்டது. எனவே, இது குறித்து அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார். மேலும், அந்த குவாட்டர் பாட்டில் சற்று வித்தியாசமாக நிறத்தில் இருப்பது தெரிந்து காலாவதி தேதியை பார்த்துள்ளார். 

அதில், ஒரு மதத்திற்கு முன்பாகவே காலவாதி ஆகியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் முறையிட்ட பொழுது அதனை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.

கடந்த வாரம் பீர் பாட்டில் வாங்கிய பொழுதும் இது போலவே காலாவதியான பாட்டில் தான் விற்கப்பட்டது என்றும், கொரோனா காலத்தில் காலாவதியான மதுபாட்டில் தற்போது விற்பனையாவதாகவும் சென்னை டாஸ்மாக் நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் மனு அனுப்பி இருக்கின்றார், 

அதுபோல மதுப்பான பாரில் சாப்பிட்ட பொழுதும் போலியான மதுபாட்டில் வழங்கவதாகவும் கூடுதல் விலை, சுகாதாரமில்லாத பார் என்றும் புகாரில் தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac fack drinks in sathiyamangalam


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal