மதுபான ஊழியர்களை மிரட்டி மாமூல்.. ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தான்..! - Seithipunal
Seithipunal


மதுபான ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுபான சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். அதனை அதிமுகவும் நிறைவேற்றவில்லை; திமுகவும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை. தொழிலாளர்கள் நலன் காக்கும் அரசு என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், அது செயல்பாட்டில் இல்லை.

தமிழக முதல்வர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று மக்களிடையே வாக்குறுதி அளித்தார். அதன் படி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 500 மதுபானக் கடைகளை மூடியதை வரவேற்கிறோம். அரசு கடைகளை மூடிவிட்டு, தனியாருக்கு மனமகிழ் மன்றம் என்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. கணினி ரசீது முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மதுபான நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதிலும் பல பிரச்சினைகளை ஊழியர்கள் சந்திப்பதால், மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். மதுபான நிறுவனத்தில் பணியிட மாற்றத்திலும், பணி நியமனத்திலும் முறைகேடுகள் நிலவுகின்றன. அதிலும் குறிப்பாக, ஆளுங்கட்சி தலையீடு இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் போக்கு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tasmac employees warning protest for ruling party mamool


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->