சுட்டெரிக்கும் வெயிலால் உச்சகட்டம்.. TANGEDCO வெளியிட்ட முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 

இதனால் தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை 19,387 மெகா வாட்டாக இருந்த நிலையில் அது படிப்படியாக உயர்ந்து கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி 19,580 மெகா வாட்டாக அதிகரித்தது. 

அதுவே தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்து வந்த நிலையில் நேற்று அதனையும் கடந்து உச்சபட்ச மின் தேவையை தமிழ்நாடு எட்டியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவை 20,125 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சில இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிலர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO announced highest electricity consumed in Tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->