தமிழகத்தின் முன்னாள் பாஜக எம்எல்ஏ மரணம்!  - Seithipunal
Seithipunal


பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கேவி முரளிதரன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். இதுவரை பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் இருந்து 5 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு சென்றுள்ளார்கள். அதில் 1996  ஆம் ஆண்டு ஒரு உறுப்பினரும்,2001 ஆம் ஆண்டு 4  உறுப்பினர்களும் சென்றார்கள். 

2001  ஆம் ஆண்டு சென்ற நான்கு உறுப்பினர்களில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த, தமிழக கர்நாடக எல்லை தொகுதியான தளி தொகுதியைச் சேர்ந்த கே வி முரளிதரன் என்பவர் ஆகும். கேள்வி முரளிதரன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா ரெட்டி என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்பொழுது அவர் எச் ராஜா, ஜெகவீரபாண்டியன், மயிலாப்பூர் லட்சுமணன் ஆகியோர் உடன் பாரதிய ஜனதாவின் 4 உறுப்பினர்களில் ஒருவராக சட்ட சபைக்குள் நுழைந்தார். 57 வயதான முரளிதரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 

அவருடைய மறைவுக்கு அவருடைய சக சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, "என்னுடன் சட்டமன்ற  உறுப்பினராக இருந்த தளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.வி.முரளிதரன் காலமானார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்ற தன்னுடைய இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamlinadu Thalli constituency EX MLA muralitharan passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->