கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
Tamilnadu very heavy rain alert Chennai IMD Alert 21 10 2025
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனுடன், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu very heavy rain alert Chennai IMD Alert 21 10 2025