வரும் 15,26,28 ஆம் தேதிகளில் டாஸ்மாக் மூடல்... டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுவிடுமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறைகள் தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான விஷயம். அந்த வகையில், ஜனவரி மாதம் அரசு விடுமுறைகள் அடுத்தடுத்து உள்ளது. 

ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 26 ஆம் தேதி குடியரசு தினமும், 28 ஆம் தேதி தைப்பூசம் தினமும் உள்ளது. இந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக பொதுவிடுமுறை உள்ள நிலையில், குடியரசு தினத்திற்கு இந்திய அளவிலான பொது விடுமுறை அமலில் உள்ளது.

இந்நிலையில், ஜனவரி மாதம் 15 ஆம் தேதி, 26 ஆம் தேதி, 28 ஆம் தேதிகளில் மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பொது விடுமுறை தினத்தில் மதுபான கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Tasmac Comity Announce January Month Holiday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal