தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu next 3 hours thunderstorm rain in 16 districts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->