#தமிழகம் || மறுபடியும் காதல் திருமணமா? பெற்ற மகளை வெட்டி கொலை செய்த தந்தை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரின் மகள் மீனா கடந்த 7 வருடங்களுக்கு முன் கால்வாய் கிராமத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 4 வயது மகனும் தந்தை இசக்கிப்பாண்டியின் பாதுகாப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முத்து என்பவரை மீனா காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு பாளையங்கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளார்.

மீனாவின் இந்த இரண்டாவது திருமணம் குறித்து அவரின் தந்தை சுடலைமுத்துவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவனமாதல் ஆத்திரமடைந்த அவர், தந்து 2வது மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, மற்றும் உறவினர்கள் வீரம்மாள், முருகன் உள்ளிட்டோருடன் நேற்று இரவு தாதன்குளத்தில் இருந்த மீனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் வாக்குவாதம் முற்றவே சுடலைமுத்து மற்றும் மாயாண்டி ஆகியோர் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினர். இதில் மீனா சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மீனாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி, வீரம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu marriage again father hacked his daughter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal