மருத்துவமனை பிணவறையில் நள்ளிரவில் பரபரப்பு! சடலத்துடன் பாலியல் வன்கொடுமை!-சிசிடிவி காட்சியில் வெடித்த அதிர்ச்சி
commotion hospital morgue midnight harassement with corpse Shocking CCTV footage
மத்தியப் பிரதேசம், புர்ஹான்பூர் மாவட்டம்: அரசு மருத்துவமனை பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயது நீலேஷ் பில்லாலா என்பவர் இந்தச் சம்பவத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் நடந்தது.

பல மாதங்கள் கண்காணிப்பு இல்லாமல் இருந்த இந்த சம்பவம், அக்டோபர் மாதம் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வெளிப்பட்டு பரபரப்பை உண்டாக்கியது.மேலும், சிசிடிவி காட்சிகளில், பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை அறைக்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சர் அருகிலிருந்து இழுத்து, கேமராவிலிருந்து மறைந்த ஒரு மூலையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்குள் வைப்பதும், அங்கு இருந்து வெளியேறும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதில் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஆதியா தாவர் கடந்த அக்டோபர் 7, 2025 அன்று புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
English Summary
commotion hospital morgue midnight harassement with corpse Shocking CCTV footage