ஏப்ரல் 2 முதல் ரூ.1000 பணம், அரிசி, பருப்பு விநியோகம்.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா முழுவதிலும் மாநிலங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

மக்களின் நடமாட்டத்தை குறைக்கும் பொருட்டும், வைரஸின் பரவலை தடுக்கும் பொருட்டும் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் வைத்து கரோனா நிதிஉதவி மற்றும் மக்களுக்கு  இலவச அரிசி, பருப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

இதன்படி, மக்களுக்கு ரூ.1000 நிதிஉதவி மற்றும் அரிசி, பருப்பு எப்போது கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியை முதல் அணைத்து குடும்ப ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்படும். 

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் ரூ.1000 பணம் மற்றும் இலவச அரிசி, பரப்பு, எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. டோக்கன் அடிப்படையில் அந்தந்த ரேஷன் கடைகளில் மக்கள் நிதிஉதவி மற்றும் அரிசி போன்ற பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். . 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt start april 2 govt fund


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal