தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்! முதல்வரின் அசத்தல் திட்டம்!!  - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்பறையை முதல்வர் பழனிசாமி தற்போது திறந்து வைத்தார். 

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து சில மாதங்களாக அரசு ஆலோசித்து வந்தது. 

இந்நிலையில், சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யூகேஜி  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,செங்கோட்டையன்,சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மழலையர்களுக்கு சீருடை, காலணி, பாடநூல்கள் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Government LKG UKG Started


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->