சந்திரனின் தாக்கத்தால் மதியிழந்த ராசிக்கல் நாயகி.. மருமகளை கொடுமைப்படுத்திய கொடூரம்.. ராசிக்கல் ராங்கான சோகம்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்.. சனிப்பெயர்ச்சிக்கு என்ன பரிகாரம் செய்யலாம்?.. என்று ஊராரின் ஜாதகத்தை கணித்து கொண்டு வந்தவர் ராசிக்கல் ஜோதிடர் கல்பனா. இந்நிலையில், தற்போது இவருக்கு சந்திரனின் உச்சகட்ட தாக்கத்தால், மதியிழந்து மருமகளை கொடுமை செய்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. 

தனது ராசிக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல், அவர் குழம்பித் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் பகுதியைச் சார்ந்த பஞ்சரத்தினம் ஜெம்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கல்பனா - ஸ்ரீகாந்த் தம்பதியருக்கு ரித்தீஷ் என்ற மகன் இருக்கிறார். 

ரித்திஷிற்கு, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரின் மகளான அன்னபூரணிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 2 கிலோ நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள், 66 வைர நகைகள், பல லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் பெண் வீட்டார் கொடுத்த நிலையில், பெண் வீட்டில் வைத்து நடந்த முதல் இரவில் ஆரம்பித்த பிரச்சனை அடுத்தடுத்த நாட்களிலும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. 

கல்பனா மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வைக்க விடாமல் இருந்த நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று காவல் நிலையத்தில் புகாரை ஏற்க வைத்துள்ளனர். ஆனால், ஊருக்கே குறிசொல்லும் கல்பனாவின் பெயர் பெருமளவிற்கு அடிபடும் என்பதால், இது குறித்த தகவலை ரகசியம் காத்து வந்துள்ளனர். 

இந்த இரகசியம் காக்கும் விவகாரம் எப்படியோ பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரியவரவே, கோவை நகரின் முக்கிய வீதிகளில் இது குறித்து நோட்டீஸ் அடித்து ஒட்டி ஒட்டியுள்ளனர். ஊருக்கே கல்லை வைத்து ராசிபலன் சொன்ன கல்பனாவிற்கு, மருமகளின் மனதை கூட புரிந்துகொள்ள இயலாமல் வரதட்சணை கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Famous Rasikal Kalpana Complaint Dowry Issue


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal