திமுக கூட்டணியில் குறைவான தொகுதியை பெற்றது எதனால்?.. சி.பி.ஐ முத்தரசன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு (சி.பி.ஐ) திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர், சி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடவுள்ள கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டணியில், சி.பி.ஐ-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் குழு நடத்திய பேச்சுவார்த்தையில், 6 இடங்களில் போட்டியிட பேசி முடிக்கப்பட்டு, கூட்டணி தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக திருத்துறைப்பூண்டி, பவானி சாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடி ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், " தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் மிகமிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா? இலட்சியமா? என்று கேட்டால், இலட்சியத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகம் ஜாதி மற்றும் மத ரீதியான பிரச்சனைகளுக்கு எதிராக இருக்கும். 

இந்த தேர்தலில் வகுப்புவாத சக்திகள் கொண்ட கட்சிகள் வலுவான காலூன்ற திட்டம் மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் அதிமுக - பாஜக அணி, மற்றொருபுறம் மற்றொரு அணி என இருக்கிறது. இதனால் திமுக கூட்டணியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. மதசார்பற்ற திமுக கூட்டணி மகத்தான வெற்றியடைய வேண்டும். திமுகவுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPI Mutharasan Pressmeet After Confirming DMK CPI Alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->