தமிழக அரசு சிறப்புடன் பணியாற்றி வருகிறது - தமிழக முதல்வர் பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர். 

இதன்பின்னர், தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலை தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, " குடிமராத்து பணிகள் மூலமாக தமிழகத்தில் இருக்கும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுக தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. ஏரிகளை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சோழர் காலத்தில் இருந்த ஏரிகளில் இருந்து அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, காவேரி ஆற்றில் தடுப்பணை கட்டப்படவுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கேயும் கதவனை கட்டப்படும். தமிழகத்தின் நீர் மேலாண்மையை பார்த்து, மத்திய அரசு சிறந்த நீர் மேலாண்மை விருது வழங்கியுள்ளது.

காவேரி - கோதாவரி ஆறு இணைப்பு திட்டம் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் தரத்தை தொடர்ந்து தமிழக அரசு உயர்த்தி வருகிறது. கோடிக்கணக்கான முதலீடுகள் தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக - அதிமுக கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும். அதிமுக அமோக வெற்றி பெரும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Speech Chennai Kalaivaran Arangam 21 November 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal