#Breaking: தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்.. தமிழக முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பட்டாசு தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நபர்களுக்கென நலவாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகரில் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நடவடிக்கை மற்றும் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விருதுநகர் மாவட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். 

பின்னர் உரையாற்றுகையில், விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக நடந்து வரும் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நீண்ட வருட கோரிக்கையாக இருந்த தனி நலவாரியம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். 

இதனைக்கேட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக நடந்து வரும் பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த அறிவிப்பு மூலமாக பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலன் பெறுவார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Announce Firework Employees Welfare comity


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->