#Breaking: தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு..!! 
                                    
                                    
                                   Tamilnadu chief Secretary work period increased addition three month  
 
                                 
                               
                                
                                      
                                            தமிழக அரசின் 46 ஆவது தலைமை செயலாளராக சண்முகம் பணியாற்றி வருகிறார். இவர் பதவி காலமானது ஜூலை மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணி ஓய்வு தேதிகள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலாளர் பல முக்கிய பணிகளை இந்த சமயத்தில் மேற்கொண்டு வருகிறார். 
இதனால் இவர் தற்போது பணி ஓய்வு பெரும் பட்சத்தில், சில இடர்பாடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு தமிழக தலைமை செயலாளரின் பதவி ஓய்வு காலநீட்டிப்பு செய்து அறிவிக்க கோரிக்கை வைத்தது. 
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தற்போது, தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பணியாற்றும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Tamilnadu chief Secretary work period increased addition three month