வனத்துக்குள் தமிழ்நாடு, அசத்தும் கிராமத்து இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


வனத்துக்குள் தமிழ்நாடு, சுற்றுச்சூழலைக் காக்க  மரக்கன்றுகளை நட்டு அசத்தும்  குழந்தைகள்...!

திருவண்ணாமலை மாவட்டம்,  மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் எவ்வித விளம்பரமும் இன்றி  செயல்பட்டு வருகிறது ‘வனத்துக்குள் தமிழ்நாடு அறக்கட்டளை’ இந்த அறக்கட்டளையின் வாயிலாக, பல்வேறு  சுற்றுச்சூழல் பணிகள் நடைமுறைப்படுத்தப் பட்டுவருகின்றன.

குறிப்பாக, நெகிழி  (பிளாஸ்டிக்) ஒழிப்பு,  மரக்கன்றுகளை நடுதல், சுற்றுச்சூழல் ஆர்வத்தைக் குழந்தைகளிடம் வளர்த்தெடுக்கும் விதமாக, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை இளைஞர்கள் சிலர் செய்து வருகின்றனர். 

பாபு, யுவராஜ், ரவிக்குமார்  ஆகிய மூவரும் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் வசிப்பவர்கள். இவர்களில் இருவர் பட்டதாரி இளைஞர்கள், ரவிக்குமார் கட்டிட கூலித்தொழிலாளி என்றாலும் இயற்கையின்மீதும் சுற்றுச்சூழல் மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணமாக, வனத்துக்குள் தமிழ்நாடு என்ற அறக்கட்டளையுடன் இணைந்து மேற்கண்ட பணிகளை செய்துவருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu, beautiful village youth in the forest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->