#Breaking: தடுப்பூசி வந்ததும் மக்களுக்கு உடனடி விநியோகம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை மாநிலத்தில் பலநலத்திட்டங்களை துவக்கி வைத்தார். விவசாயிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டு, பல அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.79 இலட்சம் பேர் காய்ச்சல் முகாம்களில் கலந்துகொண்டு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் வருடம் நடைபெற்ற உலக முதலீட்டார்கள் மாநாடு மூலமாக, புதுக்கோட்டை மாநிலத்தில் ஐ.டி.சி நிறுவனம் முதலீடு செய்தது. 

எதிர்க்கட்சி தலைவர் அர்த்தமற்ற விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். ஆனால், அவர் கூறுவதற்கு நேர் எதிராக தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல தொழில் நிறுவனங்களை ஈர்த்து அதிமுக அரசு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பலன் பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குடிமராமத்து திட்டம் மூலமாக தூர்வாரப்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை பிற மாநிலங்களை விட அதிகளவு பெற்று தந்துள்ளோம். முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழக அரசு பல தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ள நிலையில், வேண்டும் என்றே ஸ்டாலின் மக்களிடம் அவதூறு பரப்பி வருகிறார். 

காவேரி - குண்டாறு திட்டம் இம்மாதம் இறுதியில் துவக்கப்படும். கவிநாடு கண்மாய் நீர் ஆதாரங்கள் சீர் செய்யப்பட்டு பராமரிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பல்மருத்துவ கல்லூரி துவங்கப்படும். தமிழக மக்களுக்கு அரசின் செலவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilandu CM Edappadi Palanisamy Press meet Pudukkottai 22 October 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->