தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர், நிர்வாகி அதிரடி கைது: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திருச்சி, முசிறி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 65). ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர் தூங்கிக் கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் ஞானசேகர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். 

வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே நின்று ஞானசேகர் யார் என கேட்டுள்ளார். அதற்கு தமிழக முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார் என தெரிவித்துள்ளனர். 

அதற்கு ஞானசேகர் கதவை திறக்காமல் அப்படி யாரும் எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து ஞானசேகர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது தகராறில் ஈடுபட்டது. முசிறி சிவன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் (வயது 40) ஜே.பி. சண்முகம் தமிழக முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் என்பது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து ஞானசேகர் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தமிழாக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu People Munnetra Kazhagam Executive Arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->