கூடுகிறது தமிழக அமைச்சரவை - வெளியானது அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது.

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்க உள்ள முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மூத்த அமைச்சர்களின் இலாகா பறிக்கப்பட்டுள்ளது. மூன்று அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டு புதிய அமைச்சர்கள் உட்பட நான்கு நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். 

எனவே யார் எனும் மனஸ்தாபங்கள் இருந்தால் அதை தீர்க்கவும் இந்த அமைச்சரவை கூட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 116 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu MK Stalin cabinet meet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->