ஆன்லைன் நீதிமன்ற நீதிபதி என்ற பெயரில் மோசடி; ரூ.3.71 கோடியை இழந்த மும்பை பெண்..! - Seithipunal
Seithipunal


டிஜிட்டல் கைது மோசடி செய்து மும்பை சேர்ந்த 68 வயதான பெண்ணிடமிருந்து ரூ.3.71 கோடியை பறித்துள்ள குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் குறித்த பெண்மணிக்கு போன் செய்து உங்களது பெயர் பண மோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். அப்போது அதில்,தனக்கு தொடர்பு இல்லை என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்பெண் மீதான வழக்கு ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று மர்ம நபர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆன்லைன் நீதிமன்றத்தின் விசாரணையில் நீதிபதியாக இருந்த நபர் தன்னை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்போது அப்பெண் தனக்கு பணமோசடியில் தொடர்பு கிடையாது என்று அவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விசாரணையில் அப்பெண்ணிடம் இருந்த பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும் படி அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ரூ.3.75 கோடியை அந்த பெண்மணி அனுப்பி வைத்துள்ளார். பின்னர் தன ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதன் பின்னர் போலீசாரின் விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Mumbai woman was defrauded of Rs 37 million and 100 thousand by someone posing as an online court judge


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->