அமெரிக்கா உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முன் வந்துள்ளது என்கிறார் ஜெலன்ஸ்கி..!
Zelensky says the United States has offered to provide Ukraine with a 15 years security guarantee
ரஷியா- உக்ரைன் இடையிலான கடந்த நான்கு வருடங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்கு அவர் 20 அம்சம் கொண்ட திட்டத்தை பரிந்துரை செய்தார். இது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன் வந்துள்ளதாக ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷியா, உக்ரைன் மீது வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பை முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 வருடத்திற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின் போது, உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஒப்பந்தம் முன்பைவிட நெருக்கமாகியுள்ளது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஒரு மாதத்திற்கு மேலான அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முறிந்து போகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளதோடு, இன்றும் முக்கிய பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
English Summary
Zelensky says the United States has offered to provide Ukraine with a 15 years security guarantee