பரபரப்பான சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலை வரும் சட்ட ஒழுங்கு பிரச்சினை பற்றி பேச உள்ளதாக தகவல்!

இந்து மதம் பற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவதூறு கருத்தின் காரணமாக பாஜக சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் நடைபெறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ள தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளன. ஆளுங்கட்சி அமைச்சர்களின் மீதி எழுந்துள்ள ஊழல் புகார்களை ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சிகள் கொடுத்திருந்தனர். 

இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று மாலை 5.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி விரிவாக பேசப்படும் என தெரிய வருகிறது. 

டெல்லியின் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 30ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Governor meets Home Minister Amit Shah in a tense situation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->